Govt Doctor: Free Kidney Transplant Started

அரசு மருத்துவர்:  தொடங்கிய இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

Govt Doctor Free Kidney Transplant

“மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன்” சென்னை தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை ஏழை நோயாளி களுக்கு அரசு மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் (Govt Doctor Free Kidney Transplant)  தொடங்கிய இத்திட்டத்தில் முதல் நபராக நாகர்கோவில் இளைஞர் சிகிச்சை பெற்றுள்ளார்.

Govt Doctor Free Kidney Transplant

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார்.

  • ஆண்டன் யுரேஷ் குமார் மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்ற அறிவிப்பை ஃபேஸ் புக், X தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் வானொலியில் விளம்பரம் செய்த நிலையில்  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நாகர்கோவிலைச் சேர்ந்த 18 வயதான டேவிட்சன் அணுகியுள்ளார். O பாசிடிவ் ரத்த பிரிவைச் சேர்ந்த டேவிட்சனுக்கு, A பாசிடிவ் ரத்த பிரிவைச் சேர்ந்த அவரது தந்தை டேவிட் ஆபிரகாம் சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தார். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பின்னர், குறைவான கட்டணம் வசூலிக்கும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையில் டேவிட் சன், டேவிட் ஆபிரகாம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.
  • சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் தலைமை யிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் தந்தை டேவிட் ஆபிரகா மிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை, மகன் டேவிட்சனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தினர். மருந்துகள் செலவு, மருத்துவமனை கட்டணம் என மொத்தம் ரூ.3.10 லட்சத்தை தனது சொந்த சேமிப்பில் இருந்து மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமார் கொடுத்துள்ளார்.  dசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழை நோயாளிகள் ‘மெட்ராஸ் கிட்னி ஃபவுண்டேஷன்’ அமைப்பை 9500281116 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *