Govt Secondary Teacher Vacancy: 23rd June Exam Notification

அரசு இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள்: ஜூன் 23-ம் தேதி தேர்வு அறிவிப்பு

Govt Secondary Teacher

கடந்த பிப்.9-ம் தேதி அரசுப் பள்ளிகளில் 1,768 இடைநிலை ஆசிரியர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 15-ம் தேதி முடிவடைந்தது. இதற்கிடையே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டது.

Govt Secondary Teacher 

ஜூன் 23-ம் தேதி இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெறும் தேர்வுக்கு 26,506 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதால், பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *