Heavy Rain Likely in Tamil Nadu, Puducherry, Karaikal till January 2 – Chennai Meteorological Department Information

ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Heavy Rain

தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வரும் டிசம்பர் 31ஆம் தேதியன்று கனமழைக்கு (Heavy Rain) வாய்ப்புள்ளதாகவும்  தமிழ்நாடு, பாண்டிசேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Heavy-Rain-in-Tamil-Nadu

மிக்ஜாம் புயல் டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தென்மாவட்டங்களில் கடந்த 17,18ஆம் தேதிகளில் பெய்த அதிகனமழை திருநெல்வேலி, தூத்துக்குடியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் வெள்ள மீட்பு நிவாரண பணிகளால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்ற நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 27  கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 31ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 27 முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெய்த அதி கனமழையால் திருநெல்வேலி , தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்கு சென்றுள்ள நிலையில், சென்னை வானிலை மையத்தின் இந்த அறிவிப்பு தென்மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *