Heavy Rains Likely in Nilgiris on January 4 and 5 – Meteorological Department Information

நீலகிரியில் ஜனவரி 4 மற்றும் 5 தேதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Heavy Rains

தமிழகத்தில் 7 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 4, 5 ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு (Heavy Rains) வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy-Rains

சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரை, 01-01-2024 அன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (02-01-2024), தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைபெற்று அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை வாய்ப்பு (Heavy Rains)

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 04.01.2024 மற்றும் 05.01.2024  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளது. 

தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று 02.01 2024 முதல் 06.01.2024 வரை  குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *