How to Withdraw Money From ATM Without Debit card Through Cell Phone?

டெபிட் கார்டு இல்லாமல் செல்போன் மூலம் ஏடிஎம்-இல் பணம் எடுப்பது எப்படி?

Withdraw Money:

டெபிட் கார்டு (Withdraw Money) இல்லாமல் செல்போன்களில் உள்ள UPI App மூலம் ATM-களில் பணம் எடுக்கும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி, Interoperable Cardless Cash Withdrawal (ICCW) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 Withdraw Money

 

அரசு அலுவலகங்கள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI பேமெண்ட் வசதிகளை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டது. யுபிஐ பயன்பாடு காரணமாக பலரும் டெபிட் கார்டுகளையோ, கையில் பணமோ வைத்திருப்பதில்லை.

சில சமயங்களில் UPI வசதி இல்லாத போது ATM மையங்களுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. அப்படிப்பட்ட தருணங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் கையில் இல்லை என்றால் என்ன செய்வது. இனி கவலை வேண்டாம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் இல்லாமலேயே ATMகளில் இருந்து பணம் எடுக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்படி, Interoperable Cardless Cash Withdrawal (ICCW) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா வழங்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம் பொதுமக்கள் தங்கள் யுபிஐ ஆப்களை பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கலாம்.

கார்டு இல்லாமல் செல்போனில் உள்ள UPI செயலியை பயன்படுத்தி QR கோட் மூலம் பணம் எடுக்கும் வசதிகளை சில வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் UPI சேவையை வழங்கும் Google Pay, Phone-pe, உங்கள் வங்கியின் மொபைல் பேங்கிங் செயலி மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் ATM –களில் பணம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் ATM-இல் பணம் எடுக்கும் நடைமுறை: Withdraw Money

  • Interoperable Cardless Cash Withdrawal (ICCW) வசதி இருக்கும் ATM – க்கு செல்ல வேண்டும்.
  • ATM -இல் பணத்தை திரும்பப் பெறுவதற்கான (Cash Withdraw) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ATM இயந்திரத்தின் திரையில் தோன்றும் UPI விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • ATM திரையில் QR குறியீடு காண்பிக்கப்படும்.
  • QR குறியீடை UPI சேவையை வழங்கும் அப்ளிகேஷன் மூலம் Scan செய்ய வேண்டும் அல்லது மொபைல் பேங்கிங் செயலியில் உள்ள QR Cash Withdrawal ஆப்ஷனை Click செய்து அதன் மூலமும் Scan செய்யலாம்.
  • எவ்வளவு பணம் தேவை என்பதை பதிவிட வேண்டும்.
  •  UPI Password கேட்கப்படும்.
  • உங்களது
  • UPI Password டை கொடுத்து, Proceed அல்லது Press here for cash என்பதை Click செய்து பணம் எடுக்கலாம்.

தினசரி எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதை அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு உள்ள வழிமுறைகளே UPI மூலம் பணம் எடுப்பதற்கும் பொருந்தும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *