India Set up NEET Examination Centers Worldwide! Expat Students are Happy!!

உலகளவில் நீட் தேர்வு மையங்களை அமைத்த இந்தியா! வெளிநாடுவாழ் மாணவர்கள் மகிழ்ச்சி

India Set up NEET Examination Centers

இந்தியாவின் தேசிய சோதனை முகமையானது (NTA) அதன் மருத்துவ தேர்வு மையங்களை (India Set up NEET Examination Centers)  துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் திறப்பதாக அறிவித்ததன் மூலம், அமீரகத்தில் குடும்பமாக வசிக்கும் இந்திய மாணவர்கள் பலருக்கும் இந்த செய்தி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

India Set up NEET Examination Centers

NTA வெளியிட்ட அறிவிப்பில், இளங்கலை பட்டதாரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2024ம் ஆண்டு உலகெங்கிலும் சுமார் 14 சர்வதேச மையங்களில் நடத்தப்படும் என்றும் அமீரகத்தின் மூன்று எமிரேட்களிலும் தேர்வு மையங்கள் திறக்க வுள்ளதாக கூறிய இந்த அறிவிப்பு, வெளிநாடுகளில் தேர்வுக்கு தயாராகி வரும் இந்திய மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த வாரம், NTA வெளியிட்ட முதற்கட்ட ஆவணத்தில் வெளிநாட்டு மையங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை என்று செய்திகள் வெளியிடப்பட்டது. இது பெற்றோர்களையும் மாணவர்களையும் கவலையடையச் செய்தது.

தேர்வுக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்வது தங்கள் குழந்தைகளின் செயல் திறனைப் பாதிக்கலாம் என்றும், விமான டிக்கெட்டுகளின் விலை உட்பட அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை போன்ற இதிலுள்ள சிக்கல்களை நினைத்து பல பெற்றோர்களும் கவலையடைந்தனர்.

இப்போது ​​அதன் முதல் அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, NTA உலகளாவிய பல நகரங்களில் அதன் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *