India’s Longest Cable-Stayed Bridge from Gujarat’s Oga to Beit Dwarka Island – Inaugurated by PM Modi

குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரை நாட்டின் மிக நீண்ட கேபிள் பாலம் – திறந்து வைத்த பிரதமர் மோடி

India’s Longest Cable-Stayed Bridge

இந்தியாவின் மிக நீண்ட கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்ற சுதர்சன் சேது குஜராத்தின் ஓகா முதல் பெய்த் துவாரகா தீவு வரையிலான பகுதிகளை இணைக்கின்றது. ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலம் 27.20 மீட்டர் அகலம் கொண்ட குஜராத்தில் 4 வழி கொண்ட சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து உள்ளார்.

India's Longest Cable-Stayed Bridge

தேவ பூமி துவாரக நிர்வாகத்தின் அறிவிப்பின் படி, சுதர்சன் பாலம் 2.32 கி.மீ. தொலைவை உள்ளடக்கி, 900 மீட்டர் தொலைவுக்கு கேபிளால் இருபுறமும் இணைக்கப்பட்ட பகுதி, பாலத்தின் மத்தியில் அமைய பெற்று, ரூ.979 கோடி மதிப்பில் கட்டப்பட்டு 27.20 மீட்டர் அகலம் கொண்டது.  ஓகா துறைமுகத்திற்கு அருகே 30 கி.மீ. தொலைவில் அமைந்த பெய்த் துவாரகா பகுதியில் பிரபல துவாரகதீஷ் கோவில் உள்ளது. கடவுள் கிருஷ்ணருக்கான இந்த கோவிலில், கேபிள் பால திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார். சிக்னேச்சர் பாலம் என்ற பெயர் கொண்ட இந்த பாலம், சுதர்சன் சேது அல்லது சுதர்சன் பாலம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *