Individual Candidates Can Apply for Teacher Training Elementary Education Examination from 1st April

ஆசிரியர் பயிற்சி தொடக்க கல்வி தேர்வு ஏப்ரல் 1 முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

Teacher Training

ஆசிரியர் பயிற்சி தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (Teacher Training) தனித்தேர்வர்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா உத்தரவிட்டுள்ளார்.

 Teacher Training

ஆசிரியர் பயிற்சி

  • ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் சேர்த்து அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் ஏப்ரல் 1 முதல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா வசதி உள்ளதால், அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
  • ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50-ம், சான்றிதழ் மற்றும் இணையதள பதிவுக்கு ரூ.185-ம் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • வாய்ப்பை தவறவிடும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி(தட்கல்) பிரிவின் கீழ் ரூ.1,000 கூடுதல் கட்டணம் செலுத்தி ஏப்ரல் 8 மற்றும் 10-ம் தேதிகளில் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தபால் வழியே பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *