International Mathematical Tamil Conference Started at Chennai Nandambakkam

சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கிய பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு

International Mathematical Tamil Conference

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று   (பிப்ரவரி 8) தொடங்கிய பன்னாட்டு கணித் தமிழ் மாநாடு (International Mathematical Tamil Conference). தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் நடத்தப்படும் கணித்தமிழ் மாநாடு நேற்று (பிப்ரவரி 8) சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி 8,9,10 மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

 International Mathematical Tamil Conference

இந்தியாவின் முன்னோடி மாநிலமான தமிழ்நாடு, மொழியையும், தகவல் தொழில் நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடே முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் நடத்தப்படும் கணித்தமிழ் மாநாட்டினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

தமிழிணையம் 99 மாநாடு (International Mathematical Tamil Conference)

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் 1999ஆம் ஆண்டு தமிழிணையம் 99 மாநாட்டை நடத்தினார். அதை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கணித்தமிழ் மாநாடு நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் நடைபெறுகிறது.

  • இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் தான் தகவல் தொழில் நுட்ப கொள்கை 1996 இல் அறிவிக்கப்பட்டது.
  • 1999 பிப்ரவரி 8 நடத்தப்பட்ட உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தான் கணினியின் தமிழ் பயன்பாட்டில், விசைப் பலகையில் ஏற்பட்டு வந்த குழப்பத்திற்கு இம்மாநாடு முற்றுப்புள்ளி வைத்தது.
  • இணையத்தில் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்து செய்தியே முதல் வாழ்த்து செய்தியாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.
  • தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு கல்வியாளர்கள், மொழி நிபுணர்கள், கணிப்பொறி வல்லுநர்கள், சொற்செயலியை உருவாக்கியவர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர்.

 International Mathematical Tamil Conference

தமிழ் இணையக் கல்விக் கழகம்

  • உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் போன்ற பணிகளை கழகம் செய்து வருகிறது.
  • கணித்தமிழ் மாநாட்டில் குழு விவாதங்கள், காட்சி அரங்குகள், ஆய்வுக் கட்டுரைகள் வாசிப்பு, நிரலாக்கப்போட்டி, செயல்முறை விளக்கங்கள், வல்லுநர்களின் உரைகள், மற்றும் பயிற்சி பட்டறைகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
  • அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும்,
    இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் மொழியியல் அறிஞர்கள், கலந்து கொள்கிறார்கள்.
  • கூகுள். மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, AI சிங்கப்பூர், ஸோஹோ உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *