IPL 2024: Kohli’s New Record!

IPL 2024: “CSK கோலி” படைத்த புதிய சாதனை!

IPL

2024 ஆம் ஆண்டுக்கான 17-வது IPL தொடர், மார்ச் 22 சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.

IPL-2024

IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.

 CSK அபார வெற்றி

கோலி, தோனி, டூ பிளசிஸ், ஜடேஜா என பல கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்கள் களம் கண்ட போட்டியில், ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி CSK அபார வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து, அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காராக களமிறங்கிய விராட் கோலி 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டி20 கிரிக்கெட்டில் கோலி 12,000 ரன்களை பூர்த்தி செய்து, புதிய மைல்கல்லை எட்டி 6-வது வீரர் என்னும் பெருமைக்கு கோலி சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

டி20 அதிக ரன்கள் பட்டியல்

  •  கிறிஸ் கெய்ல் – 14562 ரன்கள்
  • சோயப் மாலிக் – 13360 ரன்கள்
  • கீரன் பொல்லார்ட் – 12900 ரன்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் – 12319 ரன்கள்
  • டேவிட் வார்னர் – 12065 ரன்கள்
  • விராட் கோலி – 12015 ரன்கள்

டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த இந்தியர்கள் பட்டியலில், கோலிக்கு அடுத்து 11,156 ரன்களுடன் ரோகித் 2-வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *