IPL: Chennai-Gujarat Clash Today

IPL: சென்னை -குஜராத் அணிகள் இன்று மோதல்

IPL: Chennai-Gujarat

சென்னை சேப்பாக்கத்தில்  IPL தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – குஜராத் டைட்டன்ஸ் (IPL: Chennai-Gujarat) அணியை எதிர்த்து  நடைபெறும் போட்டியில் பலப்பரீட்சை இன்று இரவு 7.30 மணிக்கு நடத்துகிறது.

IPL: Chennai-Gujarat Clash Today

தோனி கொடுத்த கேப்டன்ஷிப் என்ற வேலையை கன கச்சிதமாக முதல் போட்டியில் முடித்த ருதுராஜ் அதே உற்சாகத்தோடு இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளார். இவருக்கு ஏற்றார் போல் கான்வே இல்லாத குறையை ரச்சின் ரவீந்திரா தீர்த்து வருகிறார். முதல் போட்டியில் சிக்ஸ் அடித்து ஆச்சரியப்பட வைத்த ரஹானே, மிச்செல், ஷிவம் துபே, ரிஸ்வி, தோனி என பேட்டிங் வரிசை அசுர பலத்தில் உள்ளது. பந்து வீச்சில் பதிரனா வருகை அணிக்கு கூடுதல் பலம் அளித்தாலும் யாரை உட்காரவைப்பது என்பதில் சிக்கல் உள்ளது. குஜராத் அணி தனது சொந்த மண்ணில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால் பதிக்கிறது.

கேப்டனான ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியில் அதிரடி மன்னன் சாய் சுதர்சன், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இடம் பிடித்திருப்பதால் சேப்பாக்கம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *