IPL Cricket: CSK Win Against Gujarat

IPL கிரிக்கெட்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் CSK அணி அபார வெற்றி!!

IPL Cricket

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL Cricket போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து களம் கண்ட சென்னை அணியில், தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 46 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்து சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL Cricket: CSK Win

 

20 ஓவர்கள் முடிவில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்த சென்னை அணி இமாலய இலக்கு நிர்ணயித்ததால் குஜராத் அணி வீரர்கள் அதிரடியாக ஆடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சென்னை அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்தது. தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் மட்டும் சற்று தாக்குப்பிடித்து 37 ரன்கள் சேர்த்தார்.  20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 23 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதை வென்றார். சென்னை அணி தொடர்ந்து இரு போட்டிகளிலும் வாகை சூடியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *