IPL Cricket Match: Change of Traffic in Chepauk, Chennai on 22nd and 26th

IPL கிரிக்கெட் போட்டி: சென்னை சேப்பாக்கத்தில் 22, 26-ம் தேதி போக்குவரத்து மாற்றம்

IPL Cricket Match தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி (நாளை) தொடங்க உள்ள தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

IPL-Cricket-Match

Cricket Match

  • சென்னை அணி குஜராத் அணியுடன் 26-ம் தேதி மோதும் போட்டிகளை முன்னிட்டு, போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 22 மற்றும் 26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
  • மாலை 5 முதல் இரவு 11 மணிவரையில் இந்த மாற்றம் நடைமுறைப் படுத்தப்படும்.
  • கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் பகுதியில் வாகனங்கள் எளிதாக வரும் வகையில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு (கெனால்ரோடு), பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜாசாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்களுக்கும் வாகன நிறுத்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *