Jappan Prime Minister Appeals to People to Move to Safe Places Following Strong Earthquake / Sunami Warning

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் / சுனாமி எச்சரிக்கையும் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வேண்டுகோள்

Jappan Prime Minister

ஜப்பானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Jappan Prime Minister) ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் அந்நாட்டு அரசு தெரிவித்ததை அடுத்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

Jappan Prime Minister

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில் அடுத்தடுத்து
பலமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Jappan Prime Minister -earth-Quake

 

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது. கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் வர தொடங்கி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டதை தொடர்ந்து கடற்கரைக்கு அருகில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் கடல் நீர்
உள்ளே புகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என ஜப்பான் பிரதமர் கிஷிடா அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *