Kalaignar Centenary Library to be Inaugurated in Madurai On July 15 by CM Stalin

“காமராசர் பிறந்த நாளில் கலைஞர் நூலகம்” திறப்பு: முதலமைச்சர் பெருமிதம் !!

திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.‘திமுகவின் திராவிட மாடல் ஆட்சி, கருணாநிதி நூற்றாண்டை, அவரைப் போலவே மக்களுக்குப் பயனுள்ள திட்டங்கள் மூலம் கொண்டாடிவருகிறது. ஜூன் 15-ம் நாள் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையும் , ஜூன் 20-ம் தேதி கருணாநிதியை நமக்கு வழங்கிய திருவாரூரில் அவருடைய அன்னை அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அருகே கட்டப்பட்ட எழில்மிகு கலைஞர் கோட்டமும் திறந்துவைக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில் 2,22,815 சதுர அடி பரப்பளவில் நூலகம், 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள், அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டு, ஜீலை 15, 2023 அன்று தமிழக முதல்வரும் தி மு க தலைவருமாகிய மு க ஸ்டாலின் அவர்கள், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழாவில் திறந்து வைக்க உள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் விழா நடைபெறும் நாள் மற்றும் முகவரி:

முகவரி: நத்தம் சாலை, மகாலட்சுமி நகர், மதுரை, தமிழ்நாடு 625014

துவக்க நாள்: ஜூலை  15, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *