Kalaignar Centenary Park Works – Inspected in Person by Minister M.R.K. Paneer Selvam

கலைஞர் நூற்றாண்டு பூங்கா பணிகள் –  நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Kalaignar Centenary Park

சென்னையில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” ( Kalaignar Centenary Park ) பிப்.29-ம்தேதி அடிக்கல் நாட்டிய நிலையில் பூங்காவின் கட்டுமானப் பணிகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Artist Centenary Park

கலைஞர் நூற்றாண்டு பூங்கா

சென்னையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் வேளாண் தோட்டக்கலை சங்கம் என்ற தனியார் அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.1000 கோடி மதிப்பிலான 6.09 ஏக்கர் நிலம், நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பிறகு தமிழக அரசால் மீட்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட நிர்வாகத்தால் தோட்டக்கலைத் துறைக்கு வழங்கப்பட்டது.

  • தோட்டக்கலை துறை சாார்பில் ரூ.25 கோடியில், 6 ஏக்கரில் கண்ணாடி மாளிகை, சூப்பர் ட்ரீ கோபுரம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் கூடியகலைஞர் நூற்றாண்டு பூங்கா’ பிப்.29-ம்தேதி அடிக்கல் நாட்டினார்.

Kalaignar Centenary Park சிறப்பம்சங்கள்:

  • பூங்காவில் 40 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரம் கொண்ட “கண்ணாடி மாளிகை” அமைக்கப்பட உள்ளது.
  • வண்ண மலர்கள், அழகிய தாவரங்கள் கொண்ட பசுமை குடில் அமைக்கப்படும்.
  • இந்தியாவில் முதன் முறையாக 105 அடி உயரத்தில் சூப்பர் ட்ரீ கோபுரம் 10 மாடிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
  • கோபுரத்தின் மேல் 40 மீட்டர் சுற்றளவில் 100 பேர் நின்று பூங்காவை பார்க்கும் வசதிகள் அமைக்கப்படும்.
  •  பூங்காவில் பசுமை நடைபாதை, ரோப்கார் வசதி, அலங்கார கொடி அமைப்பு.
  • மலர்களை கொண்ட குகை, கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் நுழைவு பலகைகள். சிறப்பு நுழைவு வாயில் வளைவு, அழகுசெடிகள், கொடிகள், நறுமண பயிர்கள், புல்
  • தரை மூங்கில் தோட்டம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
  • பூங்கா பயன்பாட்டுக்கு வரும் போது சென்னை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக விளங்குவதோடு, மாநகரின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தும்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமாரவேல் பாண்டியன், வேளாண் துறை இயக்குநர் பி.முருகேஷ், எழிலன் எம்எல்ஏ உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *