Kanniyakumari: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Kanniyakumari: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Kanniyakumari

இந்தியாவின் தென்கோடியில் அமைந்து நாட்டின் அனைத்து பகுதிமக்களையும் ஈர்க்கும் வகையில் எண்ணற்ற இயற்கை அழகுகான இடங்களை தன்னகத்தே கொண்டது கன்னியாகுமாரி (Kanniyakumari) மாவட்டம். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமாரி மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன.

Kanniyakumari

வரலாறு

  • சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய் அரசும், வேணாட்டு அரசும் ஆண்டதற்கான ஆதாரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளது.
  • பாண்டியநாட்டின் தென்பகுதியில் ஆய்நாடு, வேணாடுகளை   சிற்றரசுகள் ஆட்சிபுரிந்தனர்.
  • கன்னியாகுமரி மாவட்ட நிலப்பரப்பில் களக்காடு முதல் கொல்லம் வரை உள்ள நிலப்பரப்பை 9- ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை ஆட்சி நடத்தியவர்கள் வேணாட்டு அரசர்கள்.
  • இந்த  வேணாடு பண்டைச் சேர நாட்டில் அமைந்திருந்த 18 நாடுகளில் ஒன்றாகும்.
  • வேணாட்டு அரசர்கள் திருவடி என்ற பட்டப்பெயருடன் வேணாட்டை கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1758 வரை 42 அரசர்கள் தன்னாட்சியோடு ஆண்டுள்ளனர்.
  • வேணாட்டு அரசர்கள் சேரநாட்டின் வழிவந்தவர்கள். இவர்கள் திற்பாப்பூர் பரம்பரையினராகும்.
  • ஆய் நாடு இன்றைய குமரிமுனை தொட்டு பொதியமலை சார்ந்த பகுதிகளை உள்ளடக்கி வடக்கில் திருவல்லா வரை பரவியிருந்தது.
  • சங்க காலம் முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு வரை ஆய் நாட்டின்  உட்பகுதிகளை அரச குடியினரின் வலிமையான ஆட்சி நிலவிய நாடாக வேணாடு விளங்கியது.
  • கி.பி 9ம் நூற்றாண்டில் சேர பேரரசர் சேரமான் பெருமாள் இறந்த பின் பிற்காலச் சோழர் படையெடுப்பு, வாரிசில்லா நிலை காரணங்களால் ஆய்நாடு வேணாட்டுடன் இணைந்தது.
  • வேணாடு, தற்போதைய இந்தியாவில் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது.
  • தொடக்கத்தில் திருவிதாங்கோடும் பின்பு கல்குளமும் வேணாட்டின் தலைநகராக இருந்தன.
  • கி.பி. 1758-இல் வேணாட்டு கடைசி மன்னன் இராமவர்மன் மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசைக் கைப்பற்றியது.
  • வேணாட்டு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் மார்த்தாண்ட வர்மனால் திருவிதாங்கூர் அரசாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு, இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.
  • பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சிக்குள் இருந்தது.
  • கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.
  • இம்மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
  • இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை (மொ) ஆண்கள் பெண்கள் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள்
18,70,374 926,345 944,029 1,82,350

சுற்றுலா இடங்கள்

கடற்கரைகள்

கன்னியாகுமரியில் அழகுமிக்க கடற்கரைகள்  காண்போரை கவரும் இயற்கை அழகுகளை  தன்னகத்தே கொண்ட  சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்  காட்சிகள் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. அதன் வரிசையில் கீழ் கொடுக்கப்பட்ட கடற்கரைகள் மனதை மயக்கும் சுற்றுலா தலங்களாகும்.

  • சொத்தவிளை கடற்கரை – (மேற்கு கடற்கரை சாலை)
  • முட்டம் கடற்கரை – நாகா்கோவிலிலிருந்து 16 கி.மீ. தொலை.
  • தேங்காய்பட்டினம் கடற்கரை – (விளவங்கோடு தாலுகா)
  • தெக்குறிச்சி கடற்கரை (30 கி.மீ.) – (மேற்கு கடற்கரை சாலை)
  • சங்குத்துறை கடற்கரை (15 கி.மீ.) – (மேற்கு கடற்கரை சாலை)

Coconut Beach

மாத்தூா் தொட்டிப்பாலம்

  • மாத்தூா் தொட்டிப்பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதுமான இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது.
  • இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்ட தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன.
  • விவசாய பாசன வளர்ச்சிக்காக, மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.
  • இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது.
  • இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன. நேரம் – காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை.

 Mathur tank bridge

திற்பரப்பு நீா்வீழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு என்னும் ஊரில் காணப்படும் நீா்வீழ்ச்சி நாகா்கோவிலிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ள புகழ்பெற்ற  இந்த அருவி கோதையாறு நதியில் அமைந்துள்ளது. கோதையாறு திற்பரப்பில் அருவியாக கீழே பாய்கிறது.  இது பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த நீா் வீழ்ச்சி 300 அடி நீளமும்  பாறைகளால் அமைந்த ஆற்றுப்படுகை கொண்டது. இந்த அருவி 50 அடி உயரமும், வருட த்தில் 7 மாதம் அதிக அளவு நீருடன் காணப்படும். இந்த நீா் வீழ்ச்சியின் மேற்பரப்பில் 250 மீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள திற்பரப்பு நீா் தேக்கத் திட்டமானது, சுற்று வட்டார வயல்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது. இந்த நீா் வீழ்ச்சிக்கு அருகில் ஒரு நீச்சல் குளமும் பூங்காவும். படகு சவாரியும் சுற்றுலா செல்வோரின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் கால்மிதிப் படகு வசதியும் உள்ளது.

thirparappu-fall

ஆற்றின் இடதுபக்கக் கரையில் நீா்வீழ்ச்சிக்கும் நீா்த்தேக்கத்திற்கும் நடுவே 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாதேவா் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இது பன்னிரெண்டு சிவாலயங்களுள் மூன்றாவது சிவ தலமான கோவிலில் சிவபெருமான் வீரபத்திரன் என்னும் உக்கிர வடிவில் உள்ளார். இந்தக் கோவிலில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பாண்டியா் கால கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. நேரம் – காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.

சிதறால் ஜைன மலை குகை கோயில் (Kanniyakumari)

பழங்கால ஜைன மத சிதரால் நினைவு சிற்பங்கள் மார்த்தாண்டத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் திருசரணத்துப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த ஊா் திகம்பர ஜைன மத துறவிகளின் உறைவிடமாக திகழ்ந்தது. இங்கு மலை உச்சியில் உள்ள குகையில் 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த தீா்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

13 ம் நூற்றாண்டில் இந்த குகை பகவதி அம்மன் கோவிலாக மாற்றப்பட்டது. இந்த சிதரால் மலை சொக்கன் தூங்கி மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள சிதரால் குகை அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் கொண்டது. இங்கு 9 ம் நூற்றாண்டைச் சோ்ந்த ஒன்பது கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

Kanniyakumari Chirapal Jain Hill Cave Temple

மகாத்மா காந்தி மண்டபம்

மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு 1925 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் வருகை தந்துள்ளார். இந்த மண்டபம் பிப்ரவரி 12, 1948 ம் ஆண்டு மகாத்மா காந்தியின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கட்டப்பட்டது ஆகும்.

இது ஒரிசா மாநில கட்டிடக்கலையைச் சார்ந்து கட்டப்பட்ட மண்டபத்தில் அமைக்கப் பட்டுள்ள துளை வழியாக காந்தியின் பிறந்த தினமான அக்டோபா் 2 அன்று அவரது அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சூரிய கதிர்கள் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்திய கோபுரமானது காந்தி இறந்த போது அவருடைய வயதை குறிக்கும் வகையில் 79 அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

 Kanniyakumari mahatma gandhi memorial mandapam.

பத்மநாதபுரம் அரண்மனை (Kanniyakumari)

பத்மநாதபுரம் அரண்மனை கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இறவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்ட அரண்மனை மன்னா்களின் ராஜிய உறைவிடமாக திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து 52 கி.மீ. தொலைவிலும், தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மாநில மறுசீரமைப்பு சட்டம் 1956 ன்படி இந்த அரண்மனை கேரள அரசின் ஆளுகைக்கு மாறிய இந்த அரண்மனை கேரள தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது. நவீன திருவாங்கூரை வடிவமைத்த மார்த்தாண்ட வா்மா, மரத்தாலான நவராத்திரி மண்டபத்தை கற்களால் மாற்றி அமைத்தார்.

Kanniyakumari padmanabhapuram palace

1744 ல் பெருமாள் கொட்டாரம் என்னும் 4 அடுக்கு உப்பரிகை மாளிகையையும் புதுப்பித்து வடிவமைத்தார். இம்மாளிகை 1940 ல் பல்வேறு பகுதிகளிலும் பாரம்பரிய உத்திகளின்படி புதுப்பிக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. அதில் பாரம்பரிய பொருட்கள் கல்வெட்டுக்கள், செப்புத் தகடுகள், கல் மற்றும் மரத்தால் ஆன சிற்பங்கள், நாணயங்கள் மற்றும் படைக்கலன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1994ல் இந்த அருங்காட்சியகம் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

விவேகானந்தா் நினைவு மண்டபம்

சுவாமி விவேகானந்தா் ஞானமுக்தி அடைந்ததை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டதே விவேகானந்தா் நினைவு மண்டபம் ஆகும். திரு.ஏக்நாத் ரானடே என்பவரின் இடைவிடாத முயற்சியால் பல்வேறு தடைகளைத் தாண்டி வாவத்துறையிலிருந்து 500 மீ. தொலைவில் அமைந்துள்ள இரு பாறைகளில், பெரிய பாறையின் மேல் கட்டப்பட்டது. இது 1970 ம் ஆண்டு நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இங்கு பொது மக்கள் தியானிப்பதற்காக ஒரு தியான மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் இந்தியாவின் பல்வேறு மாநில கட்டிடக் கலையினை ஒருங்கிணைத்துக் கட்டப்பட்டது. இங்கு விவேகானந்தரின் திருஉருவச் சிலை அமைந்துள்ளது.

Vivekananda Memorial Hall

திருவள்ளுவா் சிலை

திருவள்ளுவா் என்னும் தமிழ் புலவரின் 133 அடி உயர சிலை வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் அமைந்துள்ளது. 95 அடி உயர திருவள்ளுவா் சிலை திருக்குறளின் 38 அதிகாரங்களைக் கொண்ட நல்லொழுக்கம் என்னும் பாடல் தொகுப்பை குறிக்கும் வகையில் பீடத்தில் அமைந்துள்ளது.

நல்லொழுக்கமே மனிதனின் செல்வ செழிப்பிற்கும் இன்பத்திற்கும் மூலகாரணம் என்பதை விளக்கும் வகையில் இந்த 133 அதிகாரங்களைக் குறிக்கும் 133 அடி உயர பீடம் 7000 டன் எடைக் கொண்ட இந்த திருவள்ளுவா் சிலை இடுப்பு பகுதியில் ஒரு சிறிய வளைவுடன் காணப்படுகிறது.

Thiruvalluvar statue

இதை வடிவமைத்தவா் டாக்டா்.வி. கணபதி ஸ்தபதி. இந்த மூன்று அடுக்கு ஆதார பீடத்தை சுற்றி கலை வேலைப்பாடு உள்ள அலங்கார மண்டபம் உள்ளது. இந்த அலங்கார மண்டபத்தை சுற்றி 10 யானைகள் 8 திசைகளை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளவா் சிலை ஜனவரி 1, 2000ம் ஆண்டு திறக்கப்பட்டது. நேரம் – காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் (Kanniyakumari)

கன்னியாகுமரியில்  குமரி அம்மனாக வீற்றிருக்கும்   பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள குமரி அம்மனாலேயே இந்த ஊா் கன்னியாகுமரி எனப் பெயா் பெற்றது. 3000 ஆண்டுகளுக்கு முன்னால் பரசுராமனால் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்ட பகவதி அம்மன் கன்னியாக நின்று பாணாசுரன் என்னும் அசுரனை நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று வதம் செய்தார்.

குமரி அம்மனாக வீற்றிருக்கும்   பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறுகிறது.

Kanniyakumari bhagavathy-amman

முகவரி: கோயில் சாலை, கன்னியாகுமரி, தமிழ்நாடு 629702

தொலைபேசி: 04652 246 223

பார்வதி தேவி இந்தியாவின் தெற்குகடற்கரையை பாதுகாப்பது போல நிற்கின்றாள். பார்வதி தேவி வலது கையில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி தவம் புரியும் கோலத்தில் நிற்கிறாள். பார்வதி தேவியின் சிலை பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது.

குமரி அம்மனின் மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கலங்கரை விளக்கத்தின் ஒளியை ஒத்திருப்பதாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் பயணித்த கப்பலானது, இம்மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கு ஒளி என்று கருதி பாறையில் மோதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோவில் கடற்கரையில் அமைந்திருந்தாலும் இங்குள்ள கிணற்று நீா் உப்பாக இல்லாமல் சுவையாக இருக்கும்.

Kanniyakumari விமான நிலையம்

திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கன்னியாக்குமரி 110 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகர் கோவிலிருந்து 90 கி மீ தூரத்திலும் . ஒரு சில விமான சேவைகளுடன் இயங்கும் தூத்துக்குடி விமான நிலையம் கன்னியாகுமரியிலிருந்து 105 கி.மீ தொலைவில் உள்ளது.

Trivandrum International Airport

Kanniyakumari இரயில் நிலையம்

கன்னியாகுமரி / நாகர்கோவிலில் இரயில் சந்திப்பு உள்ளது. திருவனந்தபுரம் கோட்ட தலைமையிடமாகும்.

பேருந்து நிலையம்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை கன்னியாகுமரியில் சந்திக்கின்றன. வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையம் ஆகியன நாகர்கோயிலில் உள்ள முக்கியமான இரண்டு பேருந்து நிலையங்கள் ஆகும். கன்னியாகுமரி அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முகவரி:

கன்னியாகுமரி, தமிழ்நாடு, 629702

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *