Let’s Celebrate Parents – New Initiative of Tamil Nadu School Education Department

‘பெற்றோரை கொண்டாடுவோம்’ – தமிழக பள்ளிக்கல்வித் துறையின் புதிய முயற்சி

Let’s Celebrate Parents

தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ (Let’s Celebrate Parents) எனும் நிகழ்ச்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

Lets-Celebrate-Parents

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் மொத்தம் 7 மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட நிகழ்வு மதுரையில் வரும் ஜனவரி 29-ம் தேதி நடைப்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலர் ஜெ.குமர குருபரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மதுரை மண்டலத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு தலா 4 பெற்றோர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என சுமார் 30,000 பேர் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும், நிகழ்வில் பள்ளி மேம்பாடு தொடர்பாக பெற்றோருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடுவார் என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *