Lok Sabha Elections: Appointment of Constables on Security Duty – Election Commission of India Orders

மக்களவைத் தேர்தல்: பாதுகாப்பு பணியில் காவலர்கள் நியமனம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

Lok Sabha Elections Security

மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள தேர்தல் பணிகளைப் பார்வையிட (Lok Sabha Elections Security) சென்னை மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகளில் 3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Lok Sabha Elections Security 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு,  3 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் 2 காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

வட சென்னை மக்களவைத் தொகுதி

  • வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் திரு.வி.க.நகர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (கைபேசி எண் 94459 10953) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் ஜி. அருள் விஜூ (கைபேசி எண். 94451 94760).

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி

  • மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் டி. சுரேஷ் (கைபேசி எண் 94459 10956) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரின் தொடர்பு அலுவலர் பி. சிவகுமார் (கைபேசி எண். 95660 82476).

தென் சென்னை மக்களவைத் தொகுதி

  • தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பணிகளை கண்காணித்திட தேர்தல் பொது பார்வையாளர் முத்தாடா ரவிச்சந்திரா (கைபேசி எண் 94459 10957) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவரின் தொடர்பு அலுவலர் டி. கே. கணேசன் (கைபேசி எண். 94451 90218).

காவல் பார்வையாளர்கள் Lok Sabha Elections Security

  • வட சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட தேர்தல் காவல் பார்வையாளர் உதய் பாஸ்கர் பில்லா (கைபேசி எண் 94459 10962) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவரின் தொடர்பு அலுவலர் ஆனந்த்ராஜ் (கைபேசி எண். 99940 45544). மத்திய சென்னை உட்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் காவல் பணிகளை கண்காணித்திட காவல் பார்வையாளர் சஞ்சய் பாட்டியா (கைபேசி எண் 94459 10966) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவரின் தொடர்பு அலுவலர் ஆர். ஜெயகுமார் (கைபேசி எண். 94451 90058).

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 மற்றும் 044-2533 3001, 2533 3003, 2533 3004, 2533 3005, 2533 3006 ஆகிய எண்களிலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சி-விஜில் (C-Vigil App) மொபைல் செயலி மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *