Lok Sabha Elections: April 19 Public Holiday with Pay – Tamil Nadu Govt Notification

மக்களவைத் தேர்தல்: ஏப்ரல் 19 ஊதியத்துடன் பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Holiday with Pay

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறு நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளில் ஊதியத்துடன் (Holiday with Pay) கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

April 19 Public Holiday with Pay

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அரசு மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வாக்குப்பதிவு நாளான்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் BPO நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்து, மேலும் இது தொடர்பாக புகார் அளிக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை உருவாக்கி அதற்கான எண்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *