Lok Sabha Elections: DMK Alliance Parties Seat Allocation Announcement

மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பு

Lok Sabha Elections

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் (Lok Sabha Elections) பணிகளை தீவிரப்படுத்தியுள்ள திமுக கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. திமுக – அதன் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.

Lok-Sabha-Elections-DMK

  • மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
  • விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்தார். தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
  • 3 தொகுதிகள் கேட்ட நிலையில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விசிக போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திமுக கூட்டணியில், விசிகவுக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொமதேகவுக்கு நாமக்கல் தொகுதி, மதிமுகவுக்கு ஒரு தொகுதி, காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரம்:

  • திமுக – 21
  • காங்கிரஸ் – 9+ புதுச்சேரி
  • விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)
  • சிபிஐ -2
  • சிபிஎம் -2
  • மதிமுக -1
  • இயூமுலீ -1 (ராமநாதபுரம்)
  • கொமதேக -1 (நாமக்கல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *