Lok Sabha Elections: Postponement of Civil Service First Stage Exam

மக்களவைத் தேர்தல்: சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு ஒத்திவைப்பு

Civil Service

சிவில் சர்வீஸ் (Civil Service) முதல் நிலைத் தேர்வு வரும் மே மாதம் 26-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் ஜுன் 16-ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

Civil Service

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஏஎஸ் உள்ளிட்ட 24 விதமான குடிமைப் பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு ஆண்டு தோறும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.  முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

குடிமைப்பணிகளில் 1,055 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக மார்ச் 5-ம் தேதி வரை பெறப்பட்டிருந்தன. முதல் கட்ட தேர்வான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மக்களவைத் தேர்தல்

  • முதல்நிலைத் தேர்வு ஜுன் 16-ம் தேதி தள்ளிவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
  • யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
  • நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, மே 26-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஜுன் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *