Madurai First Woman Conductor Ramya – Tamil Nadu Government Transport Corporation Appointed

மதுரையின் முதல் பெண் நடத்துனர் ரம்யா – தமிழக அரசு போக்குவரத்து கழகம் நியமனம்

Madurai First Woman Conductor

தமிழகத்தின் முதல் பெண் நடத்துநராக (Madurai First Woman Conductor) மதுரையை சேர்ந்த ரம்யா நியமிக்கப் பட்டுள்ளார்.  என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது என்றார்.

Madurai First Woman Conductor

சென்னை, விழுப்புரத்தில் பெண்கள் கருணை அடிப்படையில் நடத்துநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் முதல் பெண் நடத்துனராக ரம்யா (38) என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

மதுரை கோ.புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் பாலாஜி. இவர்களுக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். பாலாஜி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் காரைக்குடி மண்டலத்தின் மதுரை உலகநேரி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்த நிலையில் கரோனாவில் பாலாஜி உயிரிந்தார். கருணை வேலை கேட்டு ரம்யா விண்ணப்பித்து குடும்ப கஷ்டத்தை விளக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பினார். ஓட்டுநர் பணி தவிர்த்து வேறு எந்த பணி வழங்கினாலும் சிறப்பாக மேற்கொள்வதாக ரம்யா குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வர் ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவருக்கு உடனடியாக கருணை பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து ரம்யாவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி வழங்கப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் மதுரை உலகநேரி கிளையில் நடத்துநராக ரம்யா பணியில் சேர்ந்தார். அவருக்கு மதுரை – ராமேஸ்வரம் பேருந்தில் நடத்துனர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரம்யாவுக்கு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மகேந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *