Maldives Attracts Indian Tourists! India Topped the Tourism List Last Year!!

இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாலத்தீவு! கடந்தாண்டு சுற்றுலா பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா!!

Maldives Attracts

கடந்தாண்டு மாலத்தீவுக்கு (Maldives Attracts) சுற்றுலா சென்ற பயணிகளில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பங்கு, 20% க்கும் அதிகரித்து முதலிடத்தில் உள்ளது.  மாலத்தீவு பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியிருக்கும் நிலையில் இந்தியாவுக்கு அடுத்த படியாக மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து நிலையில் உள்ளது.

Travel-to-Maldives

மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் Maldives Attracts

டிசம்பர் 2023 வரை மாலத்தீவுக்கு வந்தவர்களில் இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்று அந்நாட்டின் சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் கூற்றுப்படி, டிசம்பர் 13 வரை மொத்தம் 17, 57,939 சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வந்துள்ளனர்.  2022 இல் பதிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் வருகையுடன் ஒப்பிடும் போது 12.6 சதவீதம் அதிகம்.

மாலத்தீவு சுற்றுலாத்துறை டிசம்பர் 3 வரை மொத்தம் 1,703,204 சுற்றுலாப் பயணிகள் தீவு நாட்டிற்கு வந்துள்ளனர். மாலத்தீவுக்கு வருகை தந்த அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து 2,09,198, அதைத் தொடர்ந்து ரஷ்யா 2,09,146 மற்றும் சீனா 1,87,118. இங்கிலாந்தில் இருந்து மாலத்தீவுக்கு 1,55,730 பேர், ஜெர்மனியில் இருந்து 1,35,090 பேர், இத்தாலியில் இருந்து 1,18,412 பேர், அமெரிக்காவில் இருந்து 74,575 பேர், பிரான்சில் இருந்து 49,199 பேர், ஸ்பெயினில் இருந்து 40,462 பேர், ஸ்விட்சர்லாந்தில் இருந்து 37,260 பேர் மாலத்தீவுக்கு வருகை தந்துள்ளனர். மாலத்தீவுகள் இந்தியர்களுக்கு சில ஆண்டுகளாக சுற்றுலாத்தலமாக பிரபலமான தேர்வாக இருந்ததாகவும் விமானப் போக்குவரத்துத் தகவல்கள் சுட்டிக்காட்டு கின்றன.

இந்தியா – மாலத்தீவு நேரடி விமானம்

மாலத்தீவுக்கான முதல் கட்ட விரிவாக்கம் தொடங்கிய போது, ​​51,000 பயணிகள் இந்தியா – மாலத்தீவு இடையே நேரடி விமானங்களில் பயணம் செய்தனர். 2019 ஆம் ஆண்டின்  காலாண்டில் இவை 60,000 பயணிகளை எட்டியுள்ளன. இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 700 பயணிகளாகும். உலகின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் வரம்பிற்கு வெளியே இருக்கும்போது மாலத்தீவுகள் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்பாடுகளுடன் வரவேற்கத் தொடங்கின.

2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவில் இருந்து 1.15 லட்சம் பயணிகள் மாலத்தீவுக்கு சென்ற நிலையில் ஒரு நாளைக்கு சராசரியாக 1250 பயணிகள் , நேரடி விமானங்களில் 2022 இல் குறைந்தது.  மோடி தனது பயணத்தின் போது, ​​பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். லட்சத்தீவின் அழகிய கடற்கரைகளையும் பார்வை இட்டார். கடலில் ஸ்நோர்கெல்லிங் செய்யும் மோடியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, X-ல் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *