Mandatory for Female Helper: School Education Department Issues Guidelines on Vehicles

 

பெண் உதவியாளர் கட்டாயம்: வாகனங்களில் வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

School Education Department

தனியார் பள்ளி வாகனங்கள் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு சில வாகனங்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று வந்த புகார்களின் அடிப்படையில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ( School Education Department) அனுப்பியுள்ளார்.

School-Education-Department

வழிகாட்டு நெறிமுறைகள்

  • வாகனங்களில் ஜிபிஎஸ் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்
  • பள்ளி வாகனங்களில் ஒரு பெண் உதவியாளரை கட்டாயம் பணியமர்த்த வேண்டும்
  • 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்
  • பள்ளி வாகனங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும்.
  • ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • ஓட்டுநர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்பதை சோதனை செய்த பின்னர் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
  • பள்ளி வாகனங்கள், ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *