Mandatory RT-PCR Test for All Those With Flu and Cold Symptoms – Notification by Director of Public Health

காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயம் – பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு

RT-PCR Test

கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் JN1 வகை கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. கரோனா பரவல் குறித்து மாநில அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது. காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் RTPCR பரிசோதனை கட்டாயம் (Mandatory RT-PCR Test)  செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

RTPCR Mandatory RT-PCR Test

கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டார். அதன்படி, தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் யாருக்கு எல்லாம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தலை சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் வழங்கியுள்ளார்.

தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காய்ச்சல், சளி, தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர் களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தீவிர நுரையீரல் தொற்றுக்குள்ளானவர்கள், இன்ஃப்ளூயன்சா போன்ற பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *