March 31: RBI Declares Sunday as a Working Day for Banks!!

மார்ச் 31:  ஞாயிறு வங்கிகளுக்கு வேலை நாளாக அறிவித்த ஆர்பிஐ!!

RBI Declares

நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வேலை நாளாக செயல்படும் அன்றைய தினம் வங்கிகள் விடுமுறை அளிக்கப் படாது. இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும்  அரசாங்க பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கி கிளைகளையும் திறக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி (RBI Declares) தெரிவித்துள்ளது.

March 31: RBI Declares

2023-24 நிதியாண்டில் நடைபெற்ற அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் ரசீது அல்லது பணபரிவர்த்தனைகள் மூலம் கணக்கு வைப்பதற்காக மார்ச் 31, 2024 அன்று அரசாங்க பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கி கிளைகளையும் திறக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய அரசு

  • இந்திய அரசு, மார்ச் 31, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனை களுக்காக அரசாங்க ரசீதுகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
  • ஏஜென்சி வங்கிகள் அரசு வணிகம் தொடர்பான தங்களது அனைத்து கிளை களையும் மார்ச் 31, 2024 அன்று திறந்து வைக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளைக் கருத்தில் கொண்டு 2024 மார்ச் 29 முதல் மார்ச் 31 வரையிலான நீண்ட வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
  • நிலுவையில் உள்ள துறை சார்ந்த பணிகளை முடிப்பதற்கு வசதியாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களும் 2024 மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *