Memu Trains Start in Trichy Railway Sector

திருச்சி ரயில்வே கோட்டத்தில் மெமு ரயில்கள் தொடக்கம்

Memu Trains

(Memu Trains) குறைந்தபட்சம் 160 கி.மீ. தூரம் கொண்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் ரயில்கள், ‘மெமு ரயில்கள் ‘ (Mainline Electric Multiple Unit – MEMU)  என அழைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அப்பகுதியிலுள்ள நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களும் பயன்படும் வகையில் இயக்கப்படுவதால், அக்குறிப்பிட்ட பகுதியின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். இதனால், பொதுமக்களும் பெரிதும் பயனடைவர்.

Memu-Train

திருச்சியில் விரைவில் மெமு ரயில்கள் தொடங்க உள்ளதாக “திருச்சி ரயில்வே கோட்டம்” அறிவித்துள்ளது.  அந்த வகையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் முதன் முதலாக சாதாரண பெட்டிகளை கொண்ட ரயில்கள், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்பட உள்ளன. இதன்படி மயிலாடுதுறை -விழுப்புரம்(06692), விழுப்புரம்-மயிலாடுதுறை(06691) மயிலாடுதுறை- திருவாரூர் (06695), திருவாரூர்-மயிலாடுதுறை (06688), விழுப்புரம் – காட்பாடி (06698), காட்பாடி-விழுப்புரம்(06697), காட்பாடி-விழுப்புரம்(06699), திருப்பதி-காட்பாடி(06693), விழுப்புரம்-திருப்பதி(16870) ஆகிய 9 ரயில்கள் ஞாயிற்றுகிழமை முதல் மெமு ரயில்களாக இயக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *