Minister S.S.Sivashankar Inaugurated the Special Bus Service to Navagraha places.

நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

நவக்கிரக தலங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று தொடங்கி வைத்தார்.

Navagraha-temple

கும்பகோணத்திலிருந்து திங்களூர்(சந்திரன்), ஆலங்குடி(குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரிய பகவான்),கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன்கோவில் (செவ்வாய்), திருவெண் காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி பகவான்) ஆகிய நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம்,  சிறப்பு பேருந்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்ல இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் இந்தப் பேருந்தில் பயணம் செய்ய, இந்த மாதம் முழுவதும் ரூ.750 கட்டணத்தில் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதற்கான வரவேற்பைப் பொறுத்து, பேருந்து சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *