MPhil Degree: Students Should not Enroll in Unrecognized Degrees – UGC Notification

MPhil Degree: அங்கிகரிக்கப்படாத பட்டங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் – யுஜிசி அறிவிப்பு

MPhil Degree படிப்புகளில் சேர வேண்டாம் என்று யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.  யுஜிசி இன்று (டிசம்பர் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சில பல்கலைக் கழகங்கள் MPhil படிப்பிற்கு புதிதாக விண்ணப்பங்களை வரவேற்கிறது என்பது யுஜிசியின் கவனத்திற்கு வந்துள்ள நிலையில் எம்.பில் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

UGC-Notice MPhil Degree

UGC ஒழுங்குமுறை எண். 14 பிஎச்.டி. பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் விதிமுறைகள் 2022, உயர்கல்வி நிறுவனங்கள் MPhil  திட்டத்தை வழங்கக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது.

UGC

மானியக் குழு

மானியக் குழு ஒழுங்குமுறைகள் 2022′-ஐ UGC, பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த 2022 நவம்பர் 7 ஆம் தேதி இந்திய அரசிதழில் அறிக்கை வெளியிடப்பட்டது. எனவே 2023-24 கல்வி ஆண்டுக்கான MPhil படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக நிறுத்த பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் எம்.பில் படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *