NEET Medical Entrance Test Registration Extension till 16th March – National Examination Agency Notification

மார்ச் 16ம் தேதி வரை நீட் மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு பதிவு நீட்டிப்பு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

NEET Medical Entrance

2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ள நிலையில் நீட் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வுக்கான பதிவு தேதி மார்ச் 16ம் தேதி வரை (NEET Medical Entrance) நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

NEET Medical Entrance Test

தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கை :

  • 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது.
  • கடந்த பிப்ரவரி 9ம் தேதி விண்ணப்பப்பதிவு தொடங்கியது.
  • மார்ச் 9ம் தேதி இரவு 11.55 வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் மார்ச் 16ம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • விருப்பமுள்ளவர்கள் neet.nta.nic.in என்ற இணைத்தளம் வழியாக மார்ச் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரு மாணவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடம் நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும்.
  • தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
  • ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்  என தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *