One-Day Identification Strike in Madurai on Feb 15 – Jactto Geo Announcement

பிப்.15-ல் மதுரையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Jactto Geo

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மதுரையில் இன்று ஜாக்டோ ஜியோ (Jactto-geo) சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.  கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி பிப்.15-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து பிப்.26-ல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Jactto-geo

அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு 1.04.2003-க்குப் பின் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 30 % காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன. 30-ல் மறியல் போராட்டம், என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வருவாய்த் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ் ஆகியோர் தலைமையில் வகித்தனர். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி பிப்.15-ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும், அதனைத் தொடர்ந்து பிப்.26-ல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *