One Person Died in Puducherry Due to Corona Infection

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி புதுச்சேரியில் ஒருவர் பலி

Corona Infection

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்திய நிலையில் ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையிலும் கொரோனா பாதிப்பு முழுவதுமாக ஓயவில்லை. JN. 1 ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு அதிகம் இருக்காது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Corona

முகக்கவசம் கட்டாயம்

  • குளிர் காலம் என்பதால் சுவாச பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதால் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • புதிய வகை கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
  • இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேர்த்தில் கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தமிழகத்திலும் 4 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகரை சேர்ந்த 55 வயது நபர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
  • ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
  • கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *