Online Darshan Tickets for April Release Today – Tirupati Devasthanam Announcement

ஏப்ரல் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்கள் இன்று வெளியீடு – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Online Darshan Tickets

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானை வழிபட தினமும் சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஏப்ரல் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் (Online Darshan Tickets) இன்று (ஜனவரி 24) வெளியாகும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

Online-Darshan-Tickets-thiruppathi

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் கூட்டநெரிசலை குறைக்கும் விதமாகவும், பக்தர்கள் வசதிக்காகவும் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதி வழங்கப்படுகிறது. திருப்பதி வரும் பக்தர்களுக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஊஞ்சல் சேவை, டோலோற்சவம், திருப்பாவாடை, அபிஷேகம், அஷ்டதல பாத பத்மராதன சேவை ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கட்டண சேவைகள், 300 ரூபாய் கட்டண தரிசனம் ஆகியவற்றிற்கு ஆன்லைன் மூலம் தேவஸ்தான நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. 35 ஆயிரம் பக்தர்களுக்கு நாள்தோறும் 300 ரூபாய் கட்டணத்தில் ஏழுமலையானை வழிபட டிக்கெட்டுகளை பக்தர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் வகையில் வெளியிட்டுள்ளது.

24.01.2023 (இன்று ) இன்று காலை 10 மணி முதல் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் அவற்றை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *