Parliamentary Elections: Booth Silip Launches in Tamil Nadu

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்

 Booth Silip

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்களர்களுக்கு பூத் சிலிப் ( Booth Silip) வழங்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.

Booth Silip

தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 950 பேர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள நிலையில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாக்களர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கி யுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்களர் களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வீடு வீடாக சென்று அதிகாரிகள் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் விநியோகம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *