Pay Hike for Part Time Teachers – Tamil Nadu Government Notification

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Pay Hike

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 16,549 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்கள் தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு (Pay Hike) ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Part Time Teachers Pay Hike

சிறப்பு  ஆசிரியர்களின் கோரிக்கைகள்

சிறப்பு ஆசிரியர்களில் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 ஆசிரியர்கள்,  இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த ஆண்டு பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பலர் சென்னை, பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் போராட்டத்தில் நடத்தினார். சிறப்பு ஆசிரியர்களைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச்சூழலில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு Pay Hike

24.1.2024ஆம் தேதி அரசாணையில், தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர் களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை,தையல், தோட்டக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

  • 2013-2014 ஆம் ஆண்டு வரை இவர்களது தொகுப்பூதியம் ரூ.5,000/- ஆக இருந்தது.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கான 2014-2015 ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவில் இவர்களது தொகுப்பூதியம் 5,000/- லிருந்து 7,000/- ஆக உயர்த்தப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, 14.07.2017ல் இவர்களுக்குத் தொகுப்பூதியம் மாதம் ரூ.7,700/- என்றும், விடுப்பு மாதமான மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு வழங்கப்பட்டது.
  • பின்னர் ரூ.7,700/-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *