PM Modi Awarded Logo Badges to Astronauts

விண்வெளி செல்லும் வீரர்களுக்கு லோகோ பேட்ஜ்களை வழங்கிய பிரதமர் மோடி

Astronauts

திருவனந்தபுரம் வந்துள்ள பிரதமர் மோடி, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார். அங்கு 6 வருடங்களாக விண்வெளி பயிற்சி மற்றும்  ரஷியாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் பெற்ற நிலையில், விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்து, பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு (Astronauts) செல்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.

Astronauts

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் உள்பட 2 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் பங்கேற்ற பின் திருநெல்வேலியில் இருந்து ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

திருவனந்தபுரம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். கவர்னர் முகமது ஆரிப் கான், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி முரளீதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *