Polio Drip Camp on March 3 Across Tamil Nadu

தமிழகம் முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம் 57 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

Polio Drip Camp

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 3-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 5 வயதுக்குட்பட்ட 57. லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Polio Drip Camp

தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் 5 வயதுக்குட்பட்ட சுமார் 57. லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு ஏற்படுசெய்துள்ளது. பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள், தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் போலியோ எனப்படும் இளம் பிள்ளை வாதம் ஒழிப்பதற்காக ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி (ஞாயிறு) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *