Power Board Orders to Change Power Distribution Zones!

மின்பகிர்மான மண்டலங்களை மாற்றி அமைக்க மின்வாரியம் உத்தரவு!!

Power Board

தமிழ்நாடு மின்வாரியம் (Power Board) சென்னை வடக்கு, காஞ்சிபுரம், கோவை உட்பட 12 மண்டலங் களாகவும், 44 மின்பகிர்மான வட்டங்களாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் இடம்பெறும் பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய கோட்ட அலுவலகங்கள் சென்னை வடக்கு மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், மின்பகிர்மான மண்டலங்களை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் புதிதாக திருவள்ளூர் மின்பகிர்மான மண்டலத்தை உருவாக்கிய மின்வாரியம், நிர்வாக வசதிக்காக மின்பகிர்மான மண்டலங்கள் மாற்றி அமைக்க உத்தர விட்டுள்ளது.

Power-distribution-zones Power Board

நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தை புதிதாக மின்வாரியம் அமைத்து காஞ்சிபுரம் மண்டலத்தின் கீழ் செயல்படும் என உத்தரவிட்டு உள்ளது.  மேற்பார்வை பொறியாளரின் கீழ் இயங்கும் திருவள்ளூர் வட்டத்தின் கீழ் திருவள்ளூர், திருத்தணி, திருமழிசை ஆகிய கோட்ட அலுவலகங்கள் செயல் படும். சென்னை மண்டலத்தின் கீழ் சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஒன்று, தெற்கு இரண்டு ஆகிய பகிர்மான வட்டங்கள் இடம்பெறும்.

  • சென்னை வடக்கு வட்டத்தின் கீழ் பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, அம்பத்தூர் ஆகியவை இடம் பெறும்.
  • சென்னை மத்திய வட்டத்தின் கீழ் அண்ணாசாலை, எழும்பூர், மயிலாப்பூர், தி.நகர் அலுவலகங்கள் இடம் பெறும்.
  • சென்னை தெற்கு ஒன்றியத்தின் கீழ் கே.கே.நகர், கிண்டி, அண்ணாநகர் ஆகியவையும்,
  • தெற்கு இரண்டின் கீழ் அடையாறு, ஐ.டி. காரிடார், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய அலுவலகங்கள் இடம்பெறும்.
  • சென்னை மேற்கு வட்டத்தின் பெயர் ஆவடியாக மாற்றப்பட்டு இதன் கீழ், ஆவடி, போரூர், பொன்னேரி ஆகிய கோட்ட அலுவலகங்கள் செயல்படும்.
  • இது காஞ்சிபுரம் மண்டலத்தில் இடம் பெறும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *