Practical Exams for Class 12th Students Start Today

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடக்கம்

Practical Exams

தமிழ் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறைத் தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 Practical Exams

தமிழ் நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் . இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *