Prime Minister Modi Worshiped the Submerged Dwarka in the Sea of ​​Gujarat

குஜராத்தின் கடலுக்குள் மூழ்கிய துவாரகா வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி

Prime Minister Modi

குஜராத்தின் துவாரகாவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (25/02/2024) அடிக்கல் நாட்டினார். ஓகா – பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் சேது பாலம், வடினார் மற்றும் ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெட்டல்சர்- சோம்நாத் மற்றும் ஜெட்டல்சார் – வான்ஸ்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை அர்ப்பணித்தார். கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகருக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

Prime-Minister-Modi

கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகருக்கு சென்று பூஜை செய்ய விரும்பிய பிரதமர் மோடி, ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்து கிருஷ்ணரை கடலுக்கடியில் சென்று தரிசனம் செய்தார். அவருக்கு பாதுகாப்பாக பிற ஸ்கூபா டைவிங் வீரர்கள் உடன் சென்றனர். ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்த பின் தரைப் பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார்.  நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்த மறக்க முடியாத தருணம் குறித்து அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *