Process of Affixing Names and Symbols of the Candidates to the Voting Machines has Begun

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

Names and Symbols of the Candidates

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் (Names and Symbols of the Candidates)  பணி நேற்று தொடங்கியது.

Process of Affixing Names and Symbols

சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கியது. துறைமுகம் தொகுதியில் பாரதி மகளிர் கல்லூரியில் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வேளச்சேரி தொகுதிக்கு உப்டட் திருவான்மியூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பணிகளையும் ஆய்வு செய்தார்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவை தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், மத்திய சென்னையில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது. இப்பணிகள் 3 நாட்களில் முடிக்கப்படும்.

  • வாக்குப்பதிவுக்கு 11,843 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,842 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
  • வாக்காளர் தகவல் சீட்டுகள் இதுவரை 16.7 லட்சம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு ஊழியர்களில், சென்னை, இதர மாவட்டத்தினர், புதுச்சேரி ஊழியர்கள் என 14,735 அரசு ஊழியர்களிடமிருந்தும், காவல் பணிகளில் 19,122 பேரிடமிருந்தும் தபால் வாக்குகளுக்கான படிவங்கள் பெறப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4,538 தபால் வாக்குகளில் இதுவரை 1003 பேர் வாக்களித்துள்ளனர்.
  • தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக இதுவரை ரூ.14.73 கோடி,
  • வருமான வரித்துறை சார்பில் ரூ.19.92 கோடி,
  • மதுபானம் மற்றும் போதைப் பொருள் உள்ளிட்ட ரூ.59.33 லட்சம் மதிப்பிலான பொருள்களும்,
  • கலால் துறை மூலமாக ரூ.1 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *