Protest At the State Level on the 30th Due to the Failure of the Negotiations of the Transport Workers!

போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வியை கண்டதால் 30 ஆம் தேதி மாநில அளவில் போராட்டம்!

Protest

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு போக்குவரத்து ஊழியர்களின், 6 கோரிக்கைகள் தொடர்பான, மூன்றா-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வியை கண்டதால் 30 ஆம் தேதி மாநில அளவில் போராட்டம் (Protest) நடத்தப்படும் என, அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

transport Protest

வேலைநிறுத்தம்

உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்படி, அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்ட நிலையில், தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தரராஜன், ஆறுமுகநயினார், கமலகண்ணன் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து கழக நிர்வாகம் தரப்பில், ஊதிய ஒப்பந்த பேச்சு தொடர்பான கோப்புகள், நிதித்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. பிப்., 6ம் தேதி, அகவிலைப்படி உயர்வு வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறோம். வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று கூறப்பட்டது. பிப்., 7ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தும் ஆலோசனை குறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், காலவரைக்கு உட்பட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு தயாராக இல்லை. இந்த பேச்சுவார்த்தை எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை, வரும் 30ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்த உள்ளோம், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *