Public Darshan of Srirangam Renganathar Temple Canceled on Saturday Ahead of Prime Minister’s Visit!

பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பொது தரிசனம் சனிக்கிழமை ரத்து!

Srirangam Renganathar Temple

தமிழகம் வரும் பிரதமர் மோடி  3 நாள் பயணமாக ஜனவரி 19 சென்னையில் கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைத்து பின்னர் மறுநாள் காலை திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பிரதமரின் ஸ்ரீரங்கம் கோவில் (Srirangam Renganathar Temple) தரிசனத்தை முன்னிட்டு பொது தரிசனம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

Srirangam Renganathar Temple

ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்து நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். நாளை மறுநாள் காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடும் பிரதமர் மோடி, பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார். இந்தநிலையில், பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, இன்று முதல் நாளை மதியம் 2.30 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜனவரி 19 மாலை 6.00 முதல் ஜனவரி 20 மதியம் 02.30 மணி வரை பாதுகாப்பு நலன் கருதி பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM-Modi-Visit-in-trichy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *