Ramanathapuram: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Ramanathapuram: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

இராமநாதபுரம்

இராமநாதபுரம் (Ramanathapuram) 1910 ஆம் ஆண்டில், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை இணைத்தல் மூலம் உருவாக்கப்பட்டது. திரு.ஜெ.எப். பிரையன்ட், ஐ.சி.எஸ் முதல் கலெக்டராக இருந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மாவட்டம் இராமநாடு, இராம்நாடு என்றும் முன்பு முகவை என்றும் அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் சுதந்திரத்திற்குப்பிறகும் தொடர்ந்தது. பின்னர் தமிழ் மரபிற்கு ஏற்ப இராமநாதபுரம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வரலாறு

1063இல் முதலாம் ராஜேந்திர சோழன், இந்நகரை தன் ஆட்சி கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது. பின்னர் 1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த இராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது.

மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத் தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் ஆற்காடு நவாப்பான சந்தாசாகிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741 இல் மராத்தியர்களின் கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர்.

அந்த நேரத்தில், ஆற்காடு நவாப் அரியாசனத்தில் சந்தா சாகிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் கர்நாடக பிரதேசத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாகிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் கருநாடகப் போர்களுக்கு வழிவகுத்தது.

ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர், மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லபபெரிய உடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.

1910 ஆம் ஆண்டு மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் இராம்நாடு என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.

Ramanathapuram

பெயர்க்காரணம்

  • முற்காலத்தில் ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் நெல் விளையும் இடமாக இருந்துள்ளன. அச்சமயத்தில் நெல் கதிரடிக்கும் பொட்டல் பகுதியாக இருந்ததால் ராமநாதபுரத்திற்கு முகவை என்ற பெயர் வழங்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் வே. ராஜகுரு தெரிவித்துள்ளார்.
  • புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் முகவை என்ற சொல்லுக்கு அள்ளுதல், நெற்பொலி உள்ளிட்ட பல பொருளை பேரகரமுதலி குறிப்பிடுகிறது.
  • மேலும், சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் முகவைப்பாட்டு, நெல் கதிரடிக்கும் இடத்தில் பாடப்படும் பாட்டு ஆகும்.

மக்கள்தொகை விவரம்

மக்கள்தொகை (மொ) ஆண்கள் பெண்கள்
13,53,445 6,82,658 6,70,787

சுற்றுலாத்தலங்கள்

இராமநாதசுவாமி கோவில்

இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில்  தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி. இந்துகளின் தெய்வமான ஸ்ரீ ராமனின் பரிசுத்த உறைவிடமான இராமேஸ்வரம் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கம் போன்றது.

Ramanathaswamy Temple

திரு உத்திரகோசமங்கை

தர்பசயனம் என அழைக்கப்படுகிற இங்கு விஷ்ணுவின் கோவிலான ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில் இராமநாதபுரத்திலிருந்து 10.2 கி.மீ தொலைவில் உள்ளது. இராமபிரான், இலங்கைக்கு செல்ல உதவிட வேண்டி சமுத்திர இராஜனை வணங்கி தர்ப்பை புல்லின்
மீதமர்ந்து தவம் செய்ததனால் இவ்வூர் தர்ப்பசயனம் என்று சமஸ்கிருதத்தில் அழைக்கப் படுகிறது.

Uttaragosamangai Ramanathapuram

பாம்பன் பாலம் (Ramanathapuram)

விரிகுடா மீது கட்டப்பட்ட இந்தியாவில் மிகப் பெரிய பாலமான 2.2 கி.மீ.நீளமுள்ள அன்னை இந்திரா பாலம் ராமேஸ்வரம் தீவை முக்கிய பெருநிலப்பகுதியுடன் இணைக்கிறது. இது பாம்பன் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதைப்போலவே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான 2.3 கி.மீ கடல் தொடருந்து பாலமும் அதன் வித்தியாசமான கப்பல் செல்ல திறந்து மூடும் அமைப்பிற்காக புகழ் பெற்றது.

Pamban-bridge. Ramanathapuram

தேவிப்பட்டினம் (நவ பாஷாணம்)

கடற்கரை கிராமமான தேவிப்பட்டினம், நவபாஷாணம் எனவும் அழைக்கப்படுகிறது. ராமாயணத்தில் குறிப்பிடப்படும் மூன்று முக்கிய சிவாலயங்களில் இக்கோவில் ஒன்றாகும். இது நவக்கிரகங்களுக்கு (9 கிரக தெய்வங்கள்) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் கோயில் சாஸ்திரங்களின் படி ஸ்ரீ ராமரால் நிறுவப்பட்டது. ராமேஸ்வரம் செல்லும் போது இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோவில் தெய்வீகமாக கருதப்படுகிறது மற்றும் புராண நாட்களில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. இராமபிரான் நவக்கிரகங்களை இங்கு வழிபாடு செய்ததாக நம்பப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவிக்கு ஒரு கோவிலும் அருகில் உள்ளது. இந்துக்கள் முன்னோர்களுக்கான சடங்குகளை இங்கு செய்கிறார்கள்.

Devipattinam-Navagraha-temple Ramanathapuram

தனுஸ்கோடி (Ramanathapuram)

இராமேஸ்வரம் தீவின் தென்கோடி முனையானது தனுஷ்கோடி என அழைக்கப்படுகிறது. இது 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் கோதண்டராமசுவாமி கோவில் தவிர முற்றிலும் அழிவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இக்கோவில் இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. சாலை வழியாக இக்கோவிலை அடையலாம். இராவணனின் சகோதரனான விபீஷணன் இங்கு இராமபிரானிடம் சரணடைந்ததாக நம்பப்படுகிறது.

Rameswaram-Danushkodi

வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்றனர். இது சங்க காலத்துக்குப் பிந்திய வழக்கு. (வில் = தனுஷ்) கோடி என்பது முனை. வானைத் தொடும் முனை ‘கோடு’. அதுபோலக் கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தக் ‘கோடி’ என்பது இதன் சங்க காலப் பெயர். ‘தொன்முது கோடி’ என்று அது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

முனைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் மணி மண்டபம்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் அல்லது முனைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று எல்லோராலும் அறியப்பட்ட இந்தியத் திருநாட்டின் 11 வது குடியரசுத் தலைவராக விளங்கிய இவர் இராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தார். பின்னாளில், விஞ்ஞானியான இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

Dr. B. p. J. Abdul Kalam Mandapam

ஷில்லாங்கில் ஜூலை மாதம் 27ஆம் அன்னாரது திடீர் மறைவுக்குப்பிறகு 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி பேய்க்கரும்பில் நல்லடக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில், அன்னாரது நினைவாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது . மணி மண்டபத்தின் உள்ளே அரிய புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும சில ஏவுகணைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Dr.-B.-p.-J.-Abdul-Kalam-Mandapam-statues

ஏர்வாடி (Ramanathapuram)

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவிலிருந்து கண்ணனூர் வழியாக இந்தியா வந்த சுல்தான் இப்ராகிம் சையது அவுலியாவின் கல்லறை இங்கு உள்ளது. இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Ervadidargah

விமான நிலையம் (Ramanathapuram)

  • இராமநாதபுரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் மதுரை விமான நிலையம் உள்ளது.
  • தூத்துக்குடி விமான நிலையம். இராமநாதபுரத்திலிருந்து சுமார் 125 கி.மீ தொலைவில் உள்ளது.

இரயில் நிலையம் (Ramanathapuram)

  • இராமநாதபுரத்தில் உள்ள ரயில் நிலையம் விரைவு மற்றும் சாதாரண ரயில் வண்டிகளால் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தபால் நிலையம் எண்

  • அஞ்சல் குறியிடு:- 623501

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *