Rs 6000 for Family Card: Tamil Nadu Chief Minister Announces Relief Amount for People of Thoothukudi and Nellai Districts

குடும்ப அட்டைக்கு ரூ.6,000: தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு நிவாரணம்  தொகை அறிவித்த தமிழக முதல்வர்

Rs 6000 for Family Card

மிக்ஜாம் புயல் நிவாரணமாக  மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாலுகா மக்களுக்கு குடும்ப அட்டை (Rs 6000 for Family Card) அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

CM-stalin Rs 6,000 for Family Card

Rs 6000 for Family Card:

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 16-ம்தேதி இரவு முதல் 18-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் கனமழை கொட்டியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி வெள்ள சேதத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி குறிஞ்சிநகர் போல்பேட்டை பகுதியிலும், பின்னர் திருநெல்வேலி சந்திப்பிலும் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலின்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதிகன மழை குறித்து வானிலை ஆய்வு மையம் 17-ம்தேதி தான் தகவல் தெரிவித்தது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அளவை விட பல மடங்கு அதிகமாக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்தது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்  காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அரசு தென் மாவட்டங்களுக்கு 10 அமைச்சர்கள், 10 IAS அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். 375 மாநில பேரிடர் மீட்பு குழுவினர், 275 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கூடுதலாக 230 பேரிடர் மீட்பு படையினர், 168 ராணுவவீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 12,653 பேர் மீட்கப்பட்டு, 141 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, மீட்பு பணியில் 8 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரண தொகை ரூ.4 லட்சத்தில் – ரூ.5 லட்சமாகவும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000 – ரூ.10000,  முழுவதும் சேதமடைந்த நாட்டு படகுகளுக்கு ரூ.75000 – ரூ.1,00,000 , விசைப் படகுகளுக்கு ரூ.5,00,000 – ரூ.7,00,000 நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும். பயிர், கால்நடைகள், கட்டு மரங்களுக்கான நிவாரண தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.

Mikjam-token

டெல்லியில் பிரதமரை கடந்த 19-ம் தேதி சந்தித்து, சென்னை மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி மனு
அளித்தேன். தென் மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,000 கோடி ஒதுக்க வலியுறுத்தி உள்ளேன்.

  • தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் பேரிடர் நிதி ரூ.1,200 கோடி
  • இதில் 75 % அதாவது ரூ.900 கோடி மத்திய அரசு வழங்கும்.
  • எஞ்சிய 25 % மாநில அரசு வழங்கும்.
  • மத்திய அரசின் பங்களிப்பு தொகை 2 தவணையாக வழங்கப்படும்.
  • தற்போது மத்திய அரசு அளித்துள்ள ரூ.450 கோடி 2-வது தவணை ஆகும்.

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தற்போது நிகழ்ந்துள்ளதை கடும் பேரிடர்களாக அறிவித்து மத்திய அரசு கூடுதல் தொகை ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண நிதியாக ரூ.1,500 கோடியும், தென் மாவட்டங்களில் ரூ.500 கோடிக்கு அதிகமாகவும் செலவாகும் என முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *