Sabarimala Devasthanam and BSNL Jointly Introduce “Free Wi-Fi Service” to Devotees

சபரிமலை தேவஸ்தானம் மற்றும் BSNL இணைந்து “இலவச Wi-Fi சேவை” பக்தர்களுக்கு அறிமுகம்

Sabarimala Devasthanam

ஆண்டுத்தோறும் கார்த்திகை மாதம் ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து பக்தர்கள் கோவில் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஐயப்பப் பக்தர்கள் சபரிமலையில் இதுவரை 26 லட்சம் பேர் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா Wi-Fi சேவை சபரிமலை தேவஸ்தானம் (Sabarimala Devasthanam) அறிமுகம் செய்துள்ளது.

Sabarimala Devasthanam

ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு அன்று முதல் நாள்தோறும், மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 1,00,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 26 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

டிசம்பர் 27 (நாளை) சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில், சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா Wi-Fi சேவையை BSNL மற்றும் தேவசம் போர்டு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சன்னிதானம், நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புறத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச Wi-Fi சேவை ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *