Salem: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

Salem: About, History, Population, Behind the name, Places to visit (Tourism), Airport, Pin code

சேலம்

சேலம் (Salem) மாநகராட்சி தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழவர் நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும்.

Salem-Collector-Office

பெயர்க்காரணம்

சேலத்தின் முதன்மை மலைத் தொடர் சேர்வராயன் மலை. சேர+அரையன் என்பதின் திரிபே சேர்வராயன் என்றாகும். அரையன் என்பதற்கு அரசன் என்று பொருள். எனவே சேரலம் என்பதின் திரிபு சேலம் என்றானது எனலாம். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் “சாலிய சேரமண்டலம்” எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப் பட்டது எனக் கூறுவதற்குச் சிறு ஆதாரங்கள் உண்டு. ‘சேலம்’ என்றால் ‘மலைகள் சூழ்ந்த இடம்’ என்று பொருள்.

சேலம் மாவட்ட வரைபடம்

Salem-District-Map

மக்கள்தொகை விவரம்

மக்கள்தொகை (மொ) ஆண்கள் பெண்கள்
3482056 1781571 1700485

வரலாறு

சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கியது. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது. கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.

பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792இல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் திப்பு சுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு ‘பாரமஹால் மற்றும் சேலம்’ மாவட்டம் 1792இல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801இல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808இல் இ. ஆர். ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தருமபுரியில் இருந்து சேலத்திற்கு 1830இல் மாற்றப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும் கூட 1860இல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது 1965இல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. 1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

சுற்றுலாத்தலங்கள்

முட்டல்

ஆத்தூர் முல்லைவாடி சாலையில் 15கி.மீ தொலைவில் வனப்பகுதியில் ஆணைவாரி என்ற பகுதியில் இந்த எழில்மிகு அருவி அமைந்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களிலும் நல்ல மழைப்பொழிவைப் பெருகின்றன. இந்த நீர் வழிந்தோடி ஆணைவாரி அருவியில் விழுந்து அருகில் உள்ள முட்டல் கிராம எரியில் சேகரமாகிறது. இந்த ஏரியில் சுற்றலா பயணிகளின் வசதிக்காக படகு சவாரி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முட்டல் அருவியில் அதிக நீர் கொட்டுவதாலும், வனத்துறையின் சிறப்பு ஏற்பாடுகளாலும், அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

Muttal-Falls

சங்ககிரி மலைக்கோட்டை

சங்ககிரி மலைக்கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ மேற்கில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். சங்ககிரி மலைக்கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதாலும்,கிரி என்றால் மலை என்று அர்த்தம் என்பதாலும் இதற்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Sangakiri hill fort

ஏற்காடு ஏரி

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு ஏரி கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலை பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காடு இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையிலும், சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். ஏற்காடு ஏரி நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்கு பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

Yercaud-Lake

மேட்டூர் அணை

மேட்டூர் அணை இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகும், இது சமவெளியில் நுழையும் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 1934 இல் ஐரிஷ் தலைமை பொறியாளர் வின்சென்ட் ஹார்ட்டின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது. அணைத் திட்டத்தை முடிக்க 17,000 பேரின் முயற்சியில் 9 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி. இந்த அணை அதன் சொந்த நீர்ப்பிடிப்புப் பகுதியான கபினி அணை மற்றும் கர்நாடகாவில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர அணைகளில் இருந்து உள்வருகிறது . அணையின் அடிவாரத்தில் தமிழ்நாடு பொதுப் பணித்துறையால் பராமரிக்கப்படும் எல்லிஸ் பூங்கா உள்ளது. இது தமிழ்நாட்டின் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகளை வழங்குகிறது. எனவே தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக போற்றப்படுகிறது. காவேரியின் மீது கட்டப்பட்ட மேட்டூர் அணை உலகின் மிகப்பெரிய அணையாக மாறியது.

Mettur-Dam

கந்தசாமி கோவில் (Salem)

சேலத்திலிருந்து திருச்செங்கோடு வழியில் 22 கி.மீ தொலைவில் உள்ள சுந்தர கந்தசாமி கோவில் முக்கியமான 7 கோவில்களில் இதுவும் ஒன்றாகும். தை பூசம் உட்பட அனைத்து முருகக்கடவுள் விழாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

Kandasamy Temple Salem

குமரகிரி முருகன் கோவில் (Salem)

சேலம் உடையாப்பட்டி புறவழிச்சாலையில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய கோவிலாகும். சேலம் நகரத்திலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ளது.

Kumaragiri Murugan Temple Salem

1008 சிவலிங்கம் கோவில்

சேலம், கோவை நெடுஞ்சாலையில் அரியானூர் அருகில் உள்ள சிறு குன்றில் விநாயகா குழுமத்தினரால் பராமரிக்கப்படும் இக்கோவிலில் 1008 சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைக்கப் பட்டுள்ளது.

1008 Shiva Lingam Temple

ஜம்மா மசூதி (Salem)

சேலம் நகரத்தின் மையத்தில் திருமணிமுத்தாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஜம்மா மசூதியாகும் மிகப்பழமையானதாகவும், மைசூர் அரசர் திப்புசுல்தான் அவர்களால் கட்டப்பட்டதாகும். அவர் இங்கு வழிபாடுகள் நடத்தியும் உள்ளார் என அறியப்படுகிறது.

Jama Masjid Salem

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

சேலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பேருராட்சி தாரமங்கலம். இங்கு அமைந்துள்ள கைலாசநாதர் கோவில் பழைவாய்ந்த கோவிலாகும். ரதி மன்மதனுக்கு இங்கு சிலைகள் உள்ளது. இக்கோவில் கற்சிற்பங்கள் மிக பிரசித்தி பெற்றதாகும்.

tharamangalam temple

அண்ணா பூங்கா (Salem)

அண்ணா பூங்கா ஏரிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதில் கொடைவிழாவின் போது மலர் கண்காட்சி நடைபெறும். இதனுள்ளே உள்ள ஜப்பானிய பூங்கா கண்டிப்பாக கானவேண்டிய ஒன்றாகும்.

Anna Park Salem

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா (Salem)

சேலத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இயற்கையான அழகுமிகுந்த சுற்றுசூழலுடன் கூடிய ஒரு சிறிய உயிரியல் பூங்காவாகும்.

Kurumbapatti Zoo

விமான நிலையம்

  • திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சேலம் 135 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது.

இரயில் நிலையம் (Salem)

  • சேலத்திலேயே இரயில் சந்திப்பு உள்ளது. மற்றும் இது கோட்ட தலைமையிடமாகும். 842 கி.மீ நீளமுள்ள இருப்பு பாதையை கொண்டுள்ளது. சேலம் கோட்டம், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சந்திப்புகளில் ஒன்றாகும்.
  • சேலம் மாவட்டத்தில் 6 இரயில் நிலையங்கள் உள்ளன.
    1.   சேலம் சந்திப்பு 2. ஆத்தூர்  3. ஓமலூர்  4. மேட்டூர்  5. சங்ககிரி  6. மல்லூர்

சேலம் தபால் நிலையம் எண் (Salem)

  • தபால் நிலைய குறியீடு 636001

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்

மேலும் தமிழக மாவட்டங்கள் பற்றி அறிய மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *