School Education Department Orders to Fill Laboratory Assistant Posts!

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

School Education Department

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகிய ஆய்வகங்களுக்கு ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை (School Education Department) அனுமதி வழங்கியுள்ளது.

School-Education-Department

ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும். அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது. 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உபரியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணிநிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *