Sensational Confession of 4 People who Attacked Parliament Delhi Police Announcement

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் டெல்லி போலீஸ் அறிவிப்பு

Sensational Confession

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் (Parliament Suspends) கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 22–ம் தேதிவரை இக்கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. மக்களவை நேற்று முன் தினம் நடைபெறும் போது, பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்ளிட்ட இருவர் வண்ணப்புகை குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.  நாடாளு மன்றம் தாக்குதல் தொடர்பாக கைதானவர்களிடம் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாங்கள் தீக்குளிக்க திட்டமிட்டு இருந்ததாக பரபரப்பு வாக்குமூலம் (Sensational Confession) அளித்துள்ளனர்.

Winter Session

  • நாடாளுமன்றத்தில் மக்களவையில் இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
  • இந்த விவகாரத்தில் சம்பவம் நடந்த 13ஆம் தேதி, மனோரஞ்சன், சாகர் ஷர்மா, அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதியளித்தது.
  • மக்களவையில் புகை குண்டு வீசிய சம்பவத்தில் 5ஆவது நபராக லலித் ஜா கைது செய்யப்பட்ட இவர் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
  • இந்நிலையில் 6ஆவது நபராக ராஜஸ்தான் மாநிலம் நகௌர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் குமாவத்தை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர் இவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
  • அதன்படி, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து  புகை குண்டுகளை வீசுவதற்குப் பதிலாகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு சில வழிமுறைகளையும் ஆராய்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

Lok-Sabha Sensational Confession

  • நாடாளுமன்ற வாளாகத்துக்குள் தீக்குளிக்க திட்டமிட்டிருந்தோம்.
  • நெருப்பினால்  உடலில் காயம் ஏற்படாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஜெல் கிடைக்காததால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
  • அவர்கள் நாடாளுமன்றத்துக்குள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.
  • இந்த விவகாரத்தில் மக்களவை பப்ளிக் கேலரிக்கு செல்ல பாஸ் வழங்கியது தொடர்பாக மைசூரைச் சேர்ந்த பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவிடம் விசாரணைக்கு திட்டமிட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *